/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து கரன்சி சிக்கியது
/
ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து கரன்சி சிக்கியது
ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து கரன்சி சிக்கியது
ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள இங்கிலாந்து கரன்சி சிக்கியது
ADDED : மார் 21, 2024 10:05 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா பூந்தமல்லி சட்டசபை தொகுதிக்குட்பட்ட சென்னீர்குப்பம் பகுதியில் நேற்று அதிகாலை 3:20 மணியளவில் திருமழிசை டாஸ்மாக் கிடங்கு மேலாளர் சீனிவாசன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை ஆவடி செல்லும் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் வந்த டி.என். 05. ஏ.எம்.4650 என்ற பதிவெண் உள்ள இன்னோவா காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது காரில் வந்த பட்டாபிராம் கிழக்கு ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரிடம் உரிய ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ஆயிரம் பவுன்ட் இங்கிலாந்து நாட்டு பணத்தை கைப்பற்றினர்.
இதன் மதிப்பு 1.06 லட்சம் என் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
l கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பெரியபாளையம் அடுத்த வடமதுரையில், துணை பி.டி.ஓ., ேஹமலதா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பெரியபாளையம் நோக்கி, டூ-வீலரில் சென்ற, ஏனம்பாக்கம் பகுதியை சேர்ந்த விமல்ராஜ், 23, என்பவரை நிறுத்தி அவரை சோதனையிட்டனர். அவரிடம் கணக்கில் வராத, 2 லட்சத்து 60 ஆயிரத்து 540 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது. தொழில் தொடர்பாக, பணத்தை விமல்ராஜ் எடுத்து சென்றதாக தெரிவித்துள்ளார்.

