/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர் காப்பீடு அவகாசம் நீட்டிப்பு
/
பயிர் காப்பீடு அவகாசம் நீட்டிப்பு
ADDED : ஆக 13, 2024 06:58 AM
திருவள்ளூர்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் காரிப் பருவத்திற்கு காப்பீடு செய்ய வரும், 25 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளுர் மாவட்டத்தில், சொர்ணவாரி நெல், காரீப் பருவ கம்பு, பச்சை பயறு, உளுந்து மற்றும் நிலக்கடலை பயிருக்கு கடன் பெற்ற விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கு, வரும், 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காப்பீடு செய்யாத விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பன்பெறலாம். சொர்ணவாரி நெற்பயிருக்கு ஏக்கருக்கு 690, காரீப் பருவ பயிர்களான கம்பு - 218, பச்சை பயறு - 397, நிலக்கடலை, 616 மற்றும் உளுந்து 397 ரூபாய் காப்பீட்டு கட்டணமாக விவசாயிகள் செலுத்தினால் போதும்.
பயிர் காப்பீடு செய்ய, கடன் பெற்ற விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.