/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எலும்பு கூடாக மாறிய மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
/
எலும்பு கூடாக மாறிய மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
எலும்பு கூடாக மாறிய மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
எலும்பு கூடாக மாறிய மின்கம்பம் அச்சத்தில் விவசாயிகள்
ADDED : ஜூலை 01, 2024 06:00 AM

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு—நல்லாட்டூர் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் நடப்பட்டுள்ள மின்கம்பத்தை முறையாக பராமரிக்காததால் தற்போது மின்கம்பத்தின் சிமென்ட் தளம் பெயர்ந்துள்ளன.
மின்கம்பத்தில் இரும்பு கம்பிகளும் துரும்பு பிடித்து உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. பழுதடைந்த மின்கம்பத்தால் விவசாயிகள் நிலத்தில் பயிரிடவும் அச்சப்படுகின்றனர்.
அப்பகுதி விவசாயிகள் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பத்தை அமைத்து தருமாறு பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் சம்பவ இடத்தை பார்வையிட்டு, உடைந்த மின்கம்பத்தை மாற்றி தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.