/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
கால்வாயை துார்வாரி சீரமைக்க விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 05, 2024 01:28 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த பனப்பாக்கம் - பெரிய கரும்பூர் ஏரிகளுக்கு இடையே உள்ள மேய்க்கால் நிலப்பகுதி தாழ்வாக இருப்பதால், இங்கு மழைநீர் சேமித்து வைக்கப்படுகிறது.
இதற்காக, இங்கு தடுப்பணை ஒன்று கட்டப்பட்டது. தற்போது, தடுப்பணை சேதமடைந்து உள்ளது. இங்கிருந்து வெளியேறும் மழைநீர், கால்வாய் வழியாக பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில் சென்று கலக்கிறது.
விவசாய நிலங்களுக்கு இடையே பயணிக்கும் மழைநீர் கால்வாய் துார்வாரப்படாமலும், கரைகள் பலப்படுத்தபடாமலும் உள்ளது. கால்வாய் முழுதும் மரம், செடிகள் வளர்ந்து புதராக மாறியுள்ளது.
ஆங்காங்கே கரைகள் சரிந்து, விவசாய நிலங்களுக்கு சமமாக இருக்கிறது. மழைக்காலங்களில், கால்வாயில் செல்லும் மழைநீர் கரைகள் இல்லாத பகுதி வழியாக வெளியேறி, விவசாய நிலங்களை மூழ்கடிக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கிறது.
எனவே, கால்வாய் முழுதும் துார்வாரி, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.