/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயிர்காப்பீடு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
/
பயிர்காப்பீடு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பயிர்காப்பீடு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
பயிர்காப்பீடு நிவாரணம் கேட்டு விவசாயிகள் போராட்டம்
ADDED : செப் 13, 2024 11:09 PM

பொன்னேரி:பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தலைமையில் நடந்த கூட்டத்தில் வருவாய், வேளாண்மை, மின்சாரம், பொதுப்பணித்து உள்ளிட்ட் பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதில், விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சப்-கலெக்டரிடம் முறையிட்டனர். கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலின்போது பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கவில்லை என வலியுறுத்தினர்.
அதற்கு அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால், கூட்டத்தை புறக்கணித்து, சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு வழங்க வேண்டும் என வலியறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொன்னேரி தாசில்தார் மதிவாணன் பேச்சு நடத்தினார்.
வேளாண்மைதுறை அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.