/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உழவர் சந்தைக்கு வரவேற்பில்லை 'வெறிச்சோடி' காணப்படும் அவலம்
/
உழவர் சந்தைக்கு வரவேற்பில்லை 'வெறிச்சோடி' காணப்படும் அவலம்
உழவர் சந்தைக்கு வரவேற்பில்லை 'வெறிச்சோடி' காணப்படும் அவலம்
உழவர் சந்தைக்கு வரவேற்பில்லை 'வெறிச்சோடி' காணப்படும் அவலம்
ADDED : ஆக 28, 2024 08:47 PM

திருவள்ளூர்:திருவள்ளூரில் மறு சீரமைக்கப்பட்ட உழவர் சந்தை, தற்போது கடைகள் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.
திருவள்ளூர் ஜே.என்.சாலையில், 2000ம் ஆண்டு அக்., 25ல், உழவர் சந்தை திறக்கப்பட்டது. இங்கு, 40 கடைகள் அமைக்கப்பட்டு, விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை விற்பனை செய்து வந்தனர்.
அதன்பின், ஆட்சி மாற்றத்தின் காரணமாக, உழவர் சந்தை செயல்படாமல் முடங்கியது. இந்த நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், திருவள்ளூர் உழவர் சந்தை, 44.31 லட்சம் ரூபாயில் மறுசீரமைக்கப்பட்டது.
இதில், கழிப்பறை, குடிநீர் வசதியுடன், 22 கடைகள் புனரமைக்கப்பட்டது. மேலும், ஆறு புதிய கடைகள் கட்டப்பட்டன. மறுசீரமைக்கப்பட்ட உழவர் சந்தையை, கடந்த ஆண்டு கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
அப்போது, இங்கு, உழவர் உற்பத்தியாளர் குழு, விவசாயிகள் உற்பத்தி செய்த காய், கனிகள், பல்பொருள் கூட்டுறவு சிறப்பு அங்காடி, பூக்கடைகள் செயல்பட்டன.
ஆனால், இந்த கடைகளுக்கு பொதுமக்களிடம் ஆர்வம் இல்லை. காரணம், உழவர் சந்தையில் அமைத்த கடையில் காய்கறி வியாபாரிகளே கடை நடத்தியதால், மார்க்கெட்டிற்கும், உழவர் சந்தைக்கும் விலையில் வித்தியாசம் எதுவும் இல்லாமல் ஒன்றாகவே இருந்தது.
இதனால், பொதுமக்கள் திருவள்ளூர் பஜார் வீதியில் உள்ள காய்கறி கடைகளிலேயே பொருட்களை வாங்குகின்றனர். இதன் காரணமாக, உழவர் சந்தையில் ஆரம்பத்தில் போட்டி போட்டு கடைகள் வைத்தவர்கள், தற்போது கடைகள் வைக்கவில்லை. உழவர் சந்தை மீண்டும் மக்கள் கூட்டம் மற்றும் கடைகள் இன்றி வெறிச்சோடி காட்சியளிக்கிறது.