/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் 'ஆப்சென்ட்' ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்பாட்டம்
/
விவசாயிகள் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் 'ஆப்சென்ட்' ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்பாட்டம்
விவசாயிகள் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் 'ஆப்சென்ட்' ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்பாட்டம்
விவசாயிகள் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் 'ஆப்சென்ட்' ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் ஆர்பாட்டம்
ADDED : பிப் 15, 2025 01:24 AM

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று, விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என, ஏற்கனவே கோட்டாட்சியர் அலுவலகம் வாயிலாக விவசாயிகள், துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.
இதன்படி, நேற்று காலை, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால், கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மற்றும் துறை உயரதிகாரிகள் வரவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளிவேறி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷம் எழுப்பினர்.
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் ஓய். வேணுகோபால் கூறியதாவது:
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில், தச்சூர் - சித்துார், திருப்பதி - சென்னை தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரி - திண்டிவனம் புதிய ரயில் பாதைக்கு நிலம் வழங்கிய விவசாயிகள் பிரச்னைகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து தீர்த்து வைப்பதாகப வருவாய் கோட்டாட்சியர் தீபா சென்ற கூட்டத்தில் உறுதி கூறியிருந்தார்.
ஆனால், அவரே கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேலும், துறை அதிகாரிகள் வராமல் புறக்கணித்தனர். மாதந்தோறும் நடக்கும் விவசாயிகள் கூட்டத்தில் மனு கொடுக்கும் போது தீர்வு காணாமல் உள்ளதால், எதற்கு கூட்டத்தில் பங்கேற்பது என வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, திருத்தணி வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராமன் கூறியதாவது:
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் விடுப்பில் சென்றதால், திருவள்ளூரில் இருந்து பொறுப்பு வருவாய் கோட்டாட்சியர், நண்பகல் 11:00 மணிக்கு வந்தார். அப்போது, விவசாய சங்கத்தினர் அலுவலகம் முன், ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விவசாய சங்க நிர்வாகிகளிடம் கூட்டத்திற்கு வருமாறு அழைத்தோம். ஆனால், புறக்கணித்து சென்றனர்.
கூட்டரங்கில் இருந்த, 15 விவசாயிகள் துறை அலுவலர்களை வைத்து விவசாயிகள் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.