/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
/
விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம்
ADDED : மார் 12, 2025 08:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடந்து வருகிறது. இம்மாதத்திற்கான விவசாயிகள் நலன்காக்கும் கூட்டம் நாளை கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., தலைமையில், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.
இதில் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்பதால், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக தெரிவிக்கலாம். இங்கு கொடுக்கப்படும் மனுக்கள் மீதும், புகார்கள் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் கோட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறுமாறு வருவாய் துறையின் சார்பில் அறிவுறுத்தியுள்ளனர்.