/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சம்
/
குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சம்
குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சம்
குடியிருப்பு பகுதியில் சேதமடைந்த மின்கம்பத்தால் அச்சம்
ADDED : ஆக 09, 2024 11:58 PM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் மத்துார் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக, 20க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் பொருத்தப்பட்டு அதன் வாயிலாக மின் இணைப்பு வழங்கப்பட்டன. இந்நிலையில் மின்கம்பங்களை முறையாக பராமரிக்காததால், நான்கு மின்கம்பங்கள் சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளன.
இதில் இரண்டு கம்பங்களின் சிமென்ட் தளம் பெயர்ந்தும், வளைந்தும் உள்ளதால் பலத்த காற்று வீசினால் மின்கம்பம் உடைந்து வீடுகள் மீது விழும் அபாயம் உள்ளது.
சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் பொருத்த வேண்டும் என பலமுறை அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தும், மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை அகற்றி புதிய கம்பம் பொருத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.