/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தலையை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
/
தலையை பதம்பார்க்க துடிக்கும் நிழற்குடையால் அச்சம்
ADDED : பிப் 28, 2025 02:25 AM

திருவாலங்காடு:திருவள்ளூர் ---- அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருவாலங்காடு. இங்கு, அம்பேத்கர் நகரில் வசிப்போர், அரக்கோணம், திருவள்ளூர், கனகம்மாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்..
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த நிழற்குடை, ஆங்காங்கே விரிசல் விட்டும், கான்கிரீட் பெயர்ந்தும், கூரை சேதமடைந்தும் உள்ளதால், நிழற்குடையை பயன்படுத்த பயணியர் அச்சப்படுகின்றனர்.
மேலும் வெயில், மழைக்கு ஒதுங்ககூட பயன்படாத நிழற்குடையாக மாறி வருகிறது. எனவே, இந்த நிழற்குடையை அகற்றி,புதிதாக நிழற்குடையை அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.