/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எலும்புக்கூடாக மாறிய மின்கம்பங்களால் அச்சம்
/
எலும்புக்கூடாக மாறிய மின்கம்பங்களால் அச்சம்
ADDED : ஜூலை 04, 2024 01:15 AM

திருத்தணி:திருத்தணி ஒன்றியம், மேதினாபுரம் கிராமத்தில் இருந்து இருளர் காலனி மற்றும் சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் ஒன்றிய தார்ச்சாலையில், 110 கி.வோ., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டது.
இந்த மின்மாற்றியில் இருந்து இருளர் காலனியில் உள்ள 25 வீடுகளுக்கும், 20க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்மாற்றியை முறையாக பராமரிக்காததால், தற்போது மின்மாற்றியின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
மேலும், மின்கம்பத்தின் சிமென்ட் பெயர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.
மேலும், இரும்புக் கம்பி களும் சேதம் அடைந்து வருவதால், காற்று அதிகளவில் வீசினால் மின்மாற்றி உடைந்து விழும் அபாய நிலை உள்ளது.
பழுதடைந்த மின்மாற்றியின் கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க அப்பகுதி விவசாயிகள், மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.