/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடைகளில் உணவு தரம் குறித்து கள ஆய்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
/
கடைகளில் உணவு தரம் குறித்து கள ஆய்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
கடைகளில் உணவு தரம் குறித்து கள ஆய்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
கடைகளில் உணவு தரம் குறித்து கள ஆய்வு: கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : பிப் 22, 2025 10:56 PM
திருவள்ளூர்:உணவுப் பொருள் தரம் குறித்து கடைகளில் கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு விதியினை நடைமுறைபடுத்துதல் குறித்து, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:
உணவுப் பொருட்களின் தரங்கள் குறித்து கடைகளில் அடிக்கடி, கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உணவு பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல் துறையினர் கூட்டு புல தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், உடனடியாக கடைகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதை உள்ளாட்சி அமைப்புகளிடம் சமர்ப்பித்து, கடைகளை மீண்டும் திறக்க விடாமல் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.