/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடை ஊழியரை தாக்கிய நான்கு பேருக்கு 'காப்பு'
/
கடை ஊழியரை தாக்கிய நான்கு பேருக்கு 'காப்பு'
ADDED : மே 09, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:கேரனைவச் சேர்ந்தவர் சிராபுதீன், 32. இவர், பெரியபாளையம் அடுத்த தண்டலத்தில், டீக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் காலை காக்கவாக்கத்தைச் சேர்ந்த தனுஷ், 19, பாண்டியன், 21, செல்வா, 20, கபில், 23, ஆகியோர், டீக்கடையில் பிஸ்கட், டீ உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் செல்ல முயன்றனர். இதை பார்த்த கடை ஊழியர்கள் பணம் கேட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த நான்கு பேர் கடை ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர். பெரியபாளையம் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.