/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அகூரில் அடிக்கடி மின் தடை மின்மாற்றி தரம் உயர்த்த கோரிக்கை
/
அகூரில் அடிக்கடி மின் தடை மின்மாற்றி தரம் உயர்த்த கோரிக்கை
அகூரில் அடிக்கடி மின் தடை மின்மாற்றி தரம் உயர்த்த கோரிக்கை
அகூரில் அடிக்கடி மின் தடை மின்மாற்றி தரம் உயர்த்த கோரிக்கை
ADDED : மே 16, 2024 12:53 AM
திருத்தணி,:திருத்தணி ஒன்றியம் அகூர் கிராமத்தில், ஏழு தெருக்களில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். இவர்களுக்கு இரண்டு மின்மாற்றிகள் மூலம் வீடுகளுக்கு மின்இணைப்பு, ஊராட்சி ஆழ்துளை கிணறுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நடுத்தெரு மற்றும் கச்சேரி ஆகிய இரண்டு தெருக்களுக்கு, 100 கி.வோ., திறன் கொண்ட மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களாக,வீட்டு மின் இணைப்புகளுக்கு போதிய அளவில் மின்சாரம் வழங்காமல் குறைந்த அழுத்த மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
இதனால் அடிக்கடி மின்மாற்றி பழுதடைகின்றன. குறிப்பாக ஒரு மாதமாக இரவு நேரத்தில் குறைந்த அழுத்த மின்சாரத்தால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் நிம்மதியாக துாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து மேற்கண்ட பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளிடம், மின்மாற்றி தரம், 200 கி.வோ., திறன் உயர்த்தி வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மாற்றியின் தரம் உயர்த்த வேண்டும் என அகூர் மக்கள் எதிர்பார்கின்றனர்.