/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'லிப்ட்' முறையில் 6 அடி உயர்த்தப்பட்ட விநாயகர் கோவில்
/
'லிப்ட்' முறையில் 6 அடி உயர்த்தப்பட்ட விநாயகர் கோவில்
'லிப்ட்' முறையில் 6 அடி உயர்த்தப்பட்ட விநாயகர் கோவில்
'லிப்ட்' முறையில் 6 அடி உயர்த்தப்பட்ட விநாயகர் கோவில்
ADDED : ஆக 24, 2024 01:01 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில், மாநில நெடுஞ்சாலை அருகே, பிரசித்திபெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.
கடந்த, 1990ல், இக்கோவில் புதுப்பிக்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு பணிகளால், கோவில், சாலை மட்டத்தை விட, இரண்டு அடி தாழ்வான நிலைக்கு சென்றது. இதனால் மழைக்காலங்களில் கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கி, பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.
அதையடுத்து கடந்த ஆண்டு, ஜனவரி மாதம், நவீன தொழில் நுட்பமான, ஜாக்கி உதவியுடன், 'லிப்டிங்' முறையில் உயர்த்த திட்டமிடப்பட்டது.
கோவில் சுவர்களின் அடிப்பகுதியில் ஜாக்கிகள் வைத்து, சிறிது சிறிதாக ஆறு அடி உயரத்திற்கு உயர்த்தப்பட்டது. தற்போது சாலை மட்டத்தில் இருந்து, நான்கு அடி உயரத்திற்கு கோவில் உயர்த்தப்பட்டது.
கோவிலின் சுற்று சுவர், பக்தர்கள் சுற்றி வருவதற்கான உள் பிரகாரம், நவகிரக சன்னிதி ஆகியவையும் உயர்த்தப்பட்டன. கோவில் லிப்டிங் முறையில் உயர்த்தும் பணிகள் முடிந்த பின், வர்ணம் பூசுதல், மரக்கதவுகள் பொருத்துதல், பளிங்கு கற்கள் பதித்தல் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்றன. சாலை மட்டத்தை விட தாழ்வாக இருந்த வரசித்தி விநாயகர் கோவில், லிப்டிங் முறையில் நான்கு அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டு இருப்பது பக்தர்கள் இடையே வரவேற்பை பெற்று உள்ளது.
தற்போது அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் 30ம்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இங்கு நிறுவப்பட்டு உள்ள துர்கை, மகாவிஷ்ணு, தட்சணாமூர்த்தி, ஆதிவிநாயகர் சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேக நடைபெற உள்ளது. அதற்கான பந்தகால் நிகழ்வு நேற்று நடந்தது.

