/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் புகார்
/
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் புகார்
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் புகார்
கஞ்சா போதையில் வாலிபர்கள் அட்டகாசம்: எம்.எல்.ஏ.,விடம் புகார்
ADDED : ஜூலை 01, 2024 05:49 AM
திருத்தணி : திருத்தணி ஒன்றியம் தாடூர் காலனியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திருத்தணி ம.பொ.சி.சாலையில் உள்ள எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வந்தனர்.
பின் திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரனிடம், எங்கள் பகுதியில் கஞ்சா அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது.
கஞ்சா போதையில் வாலிபர்கள் பொதுமக்களிடம் தகராறு செய்கின்றனர். கஞ்சா போதையில் தான் நேற்று முன்தினம் நடந்த இறுதி சடங்கில், கோஷ்டி மோதல் ஏற்பட்டு, 12 பேர் காயம் அடைந்தனர். போலீசார் கஞ்சா போதை வாலிபர்களை கைது செய்தும், எங்கள் கிராமத்திற்கு தினமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.
எங்கள் கிராமத்திற்கு செல்வதற்கு, இ.என்.கண்டிகை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டரை கிலோ மீட்டர் ஏரிக்கரையின் மீது நடந்து செல்ல வேண்டும்.
இரவு நேரத்தில் பெண்கள் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர். சில நேரங்களில் மர்ம நபர்கள் பெண்களிடம் நகை, பணம், மொபைல் போன் போன்ற வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது.
அரசு பேருந்து இயக்க வேண்டும் என மக்கள் புகார் தெரிவித்து, மனு கொடுத்தனர். எம்.எல்.ஏ., சந்திரன், உடனடியாக திருத்தணி டி.எஸ்.பி.,யிடம் மொபைல் போன் பேசி, தகுந்த நடவடிக்கை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் நான்கு மாதத்திற்குள் உங்கள் கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்கப்படும் என எம்.எல்.ஏ., உறுதியளித்தார்.