/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடைக்கரையில் குவிக்கப்படும் குப்பை சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
/
ஓடைக்கரையில் குவிக்கப்படும் குப்பை சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
ஓடைக்கரையில் குவிக்கப்படும் குப்பை சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
ஓடைக்கரையில் குவிக்கப்படும் குப்பை சோளிங்கர் நகராட்சி அலட்சியம்
ADDED : ஏப் 12, 2024 12:38 AM

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், 50 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப்படும் குப்பை, திருத்தணி சாலையில், ஏரி உபரிநீர் கால்வாய் கரையில் கொட்டப்படுகிறது.
ஒரு பகுதி மட்டுமே, இயற்கை உரம் தயாரிக்க கொண்டு செல்லப்படுகிறது. உபரிநீர் கால்வாயில் மலைபோல் குவிந்துள்ள குப்பை சரிந்தும், காற்றில் பறந்தும் ஓடையில் கலக்கிறது. இதனால், நீர் மாசடைகிறது. கோடையில் குப்பையை தீ வைத்து எரிக்கின்றனர்.
இதனால், காற்றும் மாசடைகிறது. நீர், நிலம், காற்று என மாசு அதிகரித்து வருவதால், அப்பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துஉள்ளனர். ஓடைக்கரை தாண்டியும் சோளிங்கர் நகரின் எல்லை தற்போது விரிவடைந்துள்ளது.
குப்பை கொட்டப்படும் பகுதியைச் சுற்றிலும் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் கடந்த ஐந்தாண்டுகளில் கட்டப்பட்டுள்ளன. எனவே, குப்பையை நகருக்கு வெளியே கொண்டு சென்று முறையாக கையாள வேண்டும் என அப்பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.