/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடியிருப்பு பகுதியில் குவியும் குப்பை மணவாள நகர் பகுதிவாசிகள் அவதி

ADDED : மே 31, 2024 03:48 PM

கடம்பத்துார், மே 25-
கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் ஊராட்சிக்குட்பட்டது மணவாளநகர். இப்பகுதியில் 30க்கும் மேற்பட்ட நகர்களில் 100க்கும் மேற்பட்ட தெருக்களி்ல 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குப்பை முறையாக அகற்றப்படாதாதல் குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையோரம் குப்பை குவிந்து வருகிறது.
இந்த குப்பையில் இரை தேட கால்நடைகள் மற்றும் பன்றிகள் கிளறும்போது ஏற்படும் துர்நாற்றத்தால் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனால் பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணவாள நகர் பகுதியில் ஆய்வு செய்து குப்பை அகற்ற வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.