/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை
/
வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை
ADDED : ஏப் 26, 2024 01:04 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில்உள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி ஒட்டி கருடசேவை உற்சவம்நடந்தது.
இதையொட்டி, கோவில் வளாகத்தில் கருட வாகனத்தில் உற்சவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின் திருவள்ளூர் நகரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
அப்போது பக்தர்கள் சிறப்பு பூஜைகள் நடத்தியும், கோவிந்தா, கோவிந்தா எனகோஷமிட்டு வழிப் பட்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்காரும், செயல் அலுவலருமான பிரகாஷ்,கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாகுழுவினர் செய்திருந்தனர்.
ராம நவமி
திருத்தணி மடம் கிராமம் அனுமந்தபுரம் தெருவில் உள்ள கல்யாண ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமியின், 57 வது ஆண்டு விழா கடந்த, 17ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 19ம் தேதி ராமர்--சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. பத்து நாட்கள் விழாவில் நேற்று முன்தினம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
இரவு உற்சவர் கல்யாணராமர் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா நடந்தது. இன்று ராமர் பட்டாபிஷேகத்துடன் ராம நவமி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் மடம் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

