/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ஏசி'யில் காஸ் கசிவு பொருட்கள் தீக்கிரை
/
'ஏசி'யில் காஸ் கசிவு பொருட்கள் தீக்கிரை
ADDED : மே 27, 2024 06:39 AM
கொடுங்கையூர்: கொடுங்கையூர், முத்தமிழ் நகர், முதலாவது 'பிளாக்'கை சேர்ந்தவர் சாலம்மாள், 54.
இவர் நேற்று, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்ற நிலையில், வீட்டில் திடீரென தீப்பற்றி உள்ளது.
தீ மளமளவென பரவி, வீட்டில் இருந்த 'டிவி, ஏசி, வாஷிங் மிஷின், சோபா, டைனிங் டேபிள்', மடிக்கணினி, பீரோவில் இருந்த துணிகள் உள்ளிட்ட அனைத்தும், கொழுந்துவிட்டு எரிந்தன.
இதை பார்த்த அங்கிருந்தோர் அளித்த தகவலின்படி சத்தியமூர்த்தி நகர், எழில் நகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து, 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர்.
கொடுங்கையூர் போலீசார் விசாரணையில், 'ஏசி'யில் இருந்து காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

