/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை
/
உடல் உறுப்பு தானம் செய்த வாலிபருக்கு அரசு மரியாதை
ADDED : மே 11, 2024 01:16 AM

பொன்னேரி:பொன்னேரி வட்டம், விச்சூர் கிராமம் எழில் நகரை சேர்ந்தவர், மகேஷ், 35. தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த, 5ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சையில் இருந்தவர் அங்கு மூளைச்சாவு அடைந்தார்.
அதையடுத்து அவரது உறவினர்களின் சம்மதத்துடன், மகேஷின் உடல் உறுப்புகள் தானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் உள்பட ஏழு உறுப்புகள் தானமாக எடுத்துக் கொள்ளப்பட்டு, அரசு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் வழியாக பதிவு செய்து காத்திருந்த நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்ற அரசு உத்தரவுப்படி, நேற்று முன்தினம் பொன்னேரி சப் - கலெக்டர் வாகே சங்கத் பல்வந்த், நேரில் சென்று, மகேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
பொன்னேரி தாசில்தார் மதிவாணன் மற்றும் அதிகாரிகள் உடனடிருந்தனர்.