/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி
/
டூ - வீலர்கள் மோதல் அரசு ஊழியர் பலி
ADDED : ஜூன் 27, 2024 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அடுத்த பொன்பாடி காலனியைச் சேர்ந்தவர் சக்கரபாணி, 45. இவர், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் சக்கரபாணி தன் இருசக்கர வாகனத்தில் திருத்தணியில் இருந்து பொன்பாடி காலனிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, முருக்கம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.
இதில், தலையில் பலத்த காயமடைந்த சக்கரபாணியை மீட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.