/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயன்பாட்டிற்கு வராத கிராம சேவை மையம்
/
பயன்பாட்டிற்கு வராத கிராம சேவை மையம்
ADDED : பிப் 28, 2025 01:33 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், நெடியம் கிராமத்தில், கிராம சேவை மைய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கிராம சேவை மைய கட்டடம், 2010ல் கட்டபட்டது. கட்டி முடித்த நாளில் இருந்து இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
கிராம சேவை மைய கட்டடம், பராமரிப்பு இல்லாததால், செடிகள் வளர்ந்து பகுதிவாசிகள் அணுக முடியாத நிலையில் உள்ளது. இதனால், கிராம சேவை மைய கட்டடம் பயனின்றி வீணாகி வருகிறது.
ஊராட்சி தொடர்பான பணிகளுக்கு இந்த கட்டடத்தை பயன்படுத்த முடியாததால், பகுதிவாசிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பராமரிப்பு இன்றி இருக்கும் இந்த சேவை மைய கட்டடத்தை சீரமைத்து, நுாறு நாள் வேலை தொடர்பான பணிகளுக்கு இந்த கட்டடத்தை பயன்படுத்த கொள்ள வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த சேவை மைய வளாகத்தில், மண்புழு உரக்கொட்டிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் பயன்பாடு இன்றி சிதிலமடைந்துள்ளது.