/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியாயி கோவிலில் மயான கொள்ளை திருவிழா
/
பெரியாயி கோவிலில் மயான கொள்ளை திருவிழா
ADDED : மே 08, 2024 12:09 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ளது அங்காளபரமேஸ்வரி அம்மன் மற்றும் பெரியாயி அம்மன் கோவில்.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இதில் சித்திரை, ஆடி மாதங்களில் கொண்டாடப்படும் விழா சிறப்பு வாய்ந்தது. நேற்று சித்திரை மாத அமாவாசை விழாவை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, 9:30 மணிக்கு கொடி ஏற்றி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.
மாலை, 4:30 மணிக்கு சக்தி கரகம் எடுத்தலும், இரவு, 9:00 மணிக்கு நிசாசன்னி வதம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு நலுங்கு வைத்தல், சீர்வரிசை எடுத்து செல்லும் நிகழ்வு நடந்தது.
இதைத் தொடர்ந்து, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலமாக சென்று மயானக் கொள்ளை சூரைவிடுதல், தீச்சட்டி எடுத்தல், அலகு போடுதல் ஆகிய நிகழ்ச்சி நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு அம்மன் வர்ணிப்பு நிகழ்ச்சியும், கும்ப படையலும், 10:00 மணிக்கு உதிரவாய் துடைத்தல் நிகழ்ச்சியும் நடந்தது.
l திருத்தணி அக்கைய்யநாயுடு சாலையில் உள்ள தணிகாசலம்மன் கோவிலில், மகா கும்பாபிேஷக விழா நடந்து, 48 நாட்கள் முடிந்த நிலையில் நேற்று மண்டலாபிேஷக விழாநடந்தது.
விழாவை ஒட்டி கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமம், துர்கா ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இரவு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து அருள்பாலித்தார். இதில் திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் அம்மனை வழிப்பட்டனர்.

