/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
சாலையில் கொட்டப்பட்ட ஜல்லி: வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : ஆக 28, 2024 12:11 AM

திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருத்தணி, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றன.
இந்த சாலையில், கனகம்மாசத்திரம் அடுத்த முத்துக்கொண்டாபுரம் பேருந்து நிறுத்தம் எதிரே வீடுகட்டும் பணி நடைப்பெற்று வருவதால் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து ஜல்லி கற்கள் கொட்டி வைக்கப்பட்டு உள்ளது.
பத்து நாட்களுக்கும் மேலாக கொட்டி வைக்கப்பட்டுள்ள ஜல்லி பாதி சாலையை ஆக்கிரமித்து உள்ளதால் வாகன ஓட்டிகள் சென்று வர அச்சப்படுகின்றனர்.
மேலும் சாலை வளைவில் கொட்டப்பட்ட ஜல்லியால் வேகமாக இருசக்கர வாகனத்தில் செல்வோர், எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே விபத்தை தடுக்க சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்களை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.