/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கூட்டு குடிநீர் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது
/
கூட்டு குடிநீர் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது
கூட்டு குடிநீர் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது
கூட்டு குடிநீர் திட்டத்தால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காது
ADDED : ஜூலை 03, 2024 12:51 AM

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்திற்கு, பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, வெளிகரம், குமாரராஜபேட்டை உள்ளிட்ட சுற்றுப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திருத்தணி கோட்டாட்சியரிடம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளனர். இது தொடர்பாக சமரச கூட்டங்கள் நடந்துள்ளன.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதில், பெருமாநல்லுார், வெளிகரம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள், கலெக்டரிடம் நேரில் முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த கலெக்டர், நிலத்தடி நீர்மட்டம் இதனால் பாதிக்கப்படாது என விளக்கினார். இதை ஏற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.