ADDED : ஆக 06, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:வெங்கல் அருகே, பூச்சி அத்திப்பேடு கிராமத்தில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
வெங்கல் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் சோதனை செய்தபோது, அங்கு, ஹான்ஸ், 20, விமல், 30, வி1, 30 என மொத்தம் 80 பாக்கெட் இருந்தது. இது தொடர்பாக கடையின் உரிமையாளர் வீரராகவன், 43 கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். குட்கா புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.