ADDED : ஆக 07, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில், ரயில் நிலையம் அருகே கரிமேடு பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்குள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைத்திருந்த, 110 குட்கா பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடையின் உரிமையாளரான புதுகும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம், 50, என்பவர் கைது செய்யப்பட்டார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.