/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மணவூரில் குட்கா பறிமுதல் வியாபாரி கைது
/
மணவூரில் குட்கா பறிமுதல் வியாபாரி கைது
ADDED : மார் 30, 2024 10:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 49. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக திருவாலங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் கோபாலகிருஷ்ணன் கடையில் நேற்று முன்தினம் சோதனை செய்தனர்.
அப்போது கடையில் மூன்று கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. கோபாலகிருஷ்ணனை போலீசார் கைது செய்து, குட்கா பொருளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

