/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'ஹால்மார்க்' விழிப்புணர்வு பேரணி
/
'ஹால்மார்க்' விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 08, 2024 02:42 AM

திருவள்ளூர்:'பி.ஐ.எஸ்.,' எனப்படும் இந்திய தர நிர்ணய அமைவனம், மத்திய அரசின் நுகர்வோர் விவகாரங்கள் உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்ட ரீதியான அமைப்பு.
இந்த அமைப்பு, பொருட்களுக்கான தர உரிமம் - ஐ.எஸ்.ஐ., மார்க் வழங்குகிறது. மேலும், மேலாண்மை திட்ட சான்றிதழ், தங்கம், வெள்ளி நகைகள், கலை பொருட்களுக்கான 'ஹால்மார்க்' உரிமம் மற்றும் ஆய்வகச் சான்றிதழ் வழங்கி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், 'ஹால்மார்க்' குறித்து நகை கடைக்காரர் மற்றும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு நடைபயணம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் நடைபயணத்தை துவக்கி வைத்து பங்கேற்றார்.
கல்லுாரி மாணவ- மாணவியர் பங்கேற்ற இப்பேரணி, காமராஜர் சிலை அருகில் நிறைவடைந்தது. இதில், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், இந்திய தர நிர்ணய அமைவன சென்னை கிளை அலுவலக தலைவர் பவானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.