/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவிழாவில் காணாமல் போன நகை உரியவரிடம் ஒப்படைப்பு
/
திருவிழாவில் காணாமல் போன நகை உரியவரிடம் ஒப்படைப்பு
திருவிழாவில் காணாமல் போன நகை உரியவரிடம் ஒப்படைப்பு
திருவிழாவில் காணாமல் போன நகை உரியவரிடம் ஒப்படைப்பு
ADDED : மே 28, 2024 05:39 AM
திருவாலங்காடு: திருவாலங்காடு ஊராட்சி பாஞ்சாலி நகரில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 17ம் தேதி விழா துவங்கி 10 நாட்கள் நடைப்பெற்றது.
நேற்று முன்தினம் இரவு தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்திய போது சுற்றுவட்டார பகுதியினர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்திருந்தனர்.
சக்கரமநல்லூார் கிராமத்தை சேர்ந்த இளவரசன் மனைவி மாதவி, 25 கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் செயின் மாயமானது.
இதுகுறித்து விழாக்குழுவினரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின் காணாமல் போன இடத்தில் 30 நிமிடம் தேடினர். அப்போது கொடிமரம் அருகே செயின் கிடைத்தது. செயின் மாதவியிடம் ஒப்படைக்கப்பட்டது.