/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
/
தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
தொங்கும் விளம்பர பேனர்கள் நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
ADDED : ஆக 21, 2024 11:24 PM

திருவள்ளூர்:சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டும் நெடுஞ்சாலையோர கட்டங்கள் மீது பேனர்கள் வைப்பது தொடர்கதையாகி வருகிறது.
திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, மற்றும் சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் சாலையோர உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டு வருவது தற்போது அதிமாகி வருகிறது.
இந்த இரு நெடுஞ்சாலை வழியே தினமும் ஒரு லட்சத்திற்கு மேலான வாகனங்கள் சென்று வருகின்றன.
இவ்வாறு வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள் தற்போது ஆபத்தான நிலையில் கிழிந்து தொங்குகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் நலன் கருதி விளம்பர பேனர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.