/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பள்ளிகளை துாய்மைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
/
அரசு பள்ளிகளை துாய்மைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
அரசு பள்ளிகளை துாய்மைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
அரசு பள்ளிகளை துாய்மைப்படுத்த தலைமை ஆசிரியருக்கு உத்தரவு
ADDED : மே 28, 2024 09:23 PM
திருவள்ளூர்:ஜூன் 6ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பதால், பள்ளி வளாகத்தை துாய்மைப்படுத்தி, பராமரிப்பு பணிமேற்கொள்ளுமாறு, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் விடுத்துள்ள சுற்றறிக்கை:
கோடைகால விடுமுறை நிறைவடைந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் 6ல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
எனவே பள்ளி திறக்கப்படுவதற்கு முன்னதாகவே, பள்ளிகளை சுத்தம் செய்து தேவையான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வகுப்பறையில் இருக்கக்கூடிய மின் சாதனம், மின் இணைப்பு, சுவிட்ச் மற்றும் துாய்மைப் பணியை செய்ய வேண்டும்.
வகுப்பறையில் உள்ள தளவாடப் பொருட்களையும், பள்ளி வளாகத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். கழிப்பறை, குடிநீர் தொட்டிகளை சுத்தப்படுத்த வேண்டும். மழை காலங்களில் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காதவாறு சீர்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.