/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடைகள் விளம்பரம் வைக்கும் இடமான அவலம்
/
நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடைகள் விளம்பரம் வைக்கும் இடமான அவலம்
நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடைகள் விளம்பரம் வைக்கும் இடமான அவலம்
நெடுஞ்சாலை பயணியர் நிழற்குடைகள் விளம்பரம் வைக்கும் இடமான அவலம்
ADDED : மார் 09, 2025 11:59 PM

திருமழிசை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, திருமழிசை பேரூராட்சி. இப்பகுதிவாசிகள் பயன்பாட்டிற்காக நெடுஞ்சாலையோரம் 10க்கும் மேற்பட்ட நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிழற்குடைகள் போதிய பராமரிப்பு இல்லாததால், பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை பயன்படுத்தி, இப்பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடைகளை அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் வணிக நிறுவனத்தினர் விளம்பர வைக்கும் இடமாக மாற்றியுள்ளனர்.
இவ்வாறு பயணியர் நிழற்குடைகள் விளம்பர மையமாக மாறி வருவது, அரசியல் கட்சியினர் மற்றும் வணிக நிறுவனங்களிடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. சில நேரங்களில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல், நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், கொரட்டூர், புதுச்சத்திரம், அரண்வாயல் உட்பட பல இடங்களில் பயணியர் நிழற்குடைகள், அரசியில் கட்சியினரின் விளம்பர மையமாக மாறியுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், நெடுஞ்சாலையோரம் விளம்பர மையமாக மாறி வரும் பயணியர் நிழற்குடைகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.