/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மண் சாலையாக மாறி வரும் நெடுஞ்சாலை விபத்து: அபாயத்தில் வாகன ஓட்டிகள்

ADDED : செப் 07, 2024 07:39 AM

திருவள்ளூர் : சென்னை - பெங்களூர் அதிவிரைவு நெடுஞ்சாலையில் பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், திருமழிசை, குத்தம்பாக்கம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம், இருங்காட்டு கோட்டை உட்பட பல பகுதிகள் உள்ளன.
கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது.
குறிப்பாக ஸ்ரீபெரும்புதுார் டோல்கேட் முதல் சென்னை கோயம்பேடு வரை பல பகுதிகளில் நெடுஞ்சாலை மீடியன் மற்றும் சாலையோரம் மழைநீர் தேங்கி நின்றது.
மழையால் சாலையில் தேங்கிய மழைநீர் வடிந்து சென்றது. இருப்பினும் மழை நீர் தேங்கியிருந்த இடத்தில் ஆங்காங்கே சாலையோர தடுப்பு மற்றும் மீடியன் பகுதியில் வண்டல் மண் காணப்படுகிறது. வண்டல் மண் சாலையாக மாறி வரும் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிவிரைவு தேசிய நெடுங்சாலையில் ஆய்வு செய்து வண்டல் மண்ணை அகற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.