/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் செல்ல உடைக்கப்பட்ட மீடியன் சீரமைப்பில் நெடுஞ்சாலை துறை அலட்சியம்

ADDED : ஏப் 17, 2024 12:22 AM

மீஞ்சூர்:கடந்தாண்டு டிசம்பர் மாதம் வீசிய, 'மிக்ஜாம்' புயல் மழையின்போது, பொன்னேரி - திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மீஞ்சூர் அடுத்துள்ள கொண்டக்கரை, வெள்ளிவாயல்சாவடி, சுப்பாரெட்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் தேங்கியது.
சாலையில் இருந்த மீடியன்களால், ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு மழைநீர் செல்வதில் தடை ஏற்பட்டது.
குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து இருந்ததால், அவற்றை உடனடியாக வெளியேறுவதற்காக, இப்பகுதி சாலையில் இருந்த மீடியன்கள் ஆங்காங்கே ஜே.சி.பி., இயந்திரங்களை கொண்டு உடைக்கப்பட்டன.
புயல் வீசி, நான்கு மாதங்கள் முடிந்த நிலையில், உடைக்கப்பட்ட மீடியன் பகுதிகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளன. கான்கிரீட் கட்டுமானங்களும் அங்கிருந்து அகற்றப்படாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.
உடைக்கப்பட்ட மீடியன் பகுதிகள் வழியாக பாதசாரிகளும், கால்நடைகளும் சாலையின் குறுக்கே பயணிப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர். இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்களை தவிர்க்க, உடைக்கப்பட்ட மீடியன்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.