ADDED : மே 01, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.கே.பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் பாறைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமன், 28. இவரும், அவரது மனைவி சூர்யாவும், நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, சூர்யா குளக்கரையில் இருந்தபோது, குளத்தில் இறங்கி ராமன் குளித்துக் கொண்டிருக்கையில், தண்ணீருக்குள் மூழ்கியவர், வெகு நேரமாக வெளியில் வரவில்லை.
இதையடுத்து, அவரது மனைவி சூர்யா, அருகில் இருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, குளத்தில் வெகுநேரம் தேடினர். பின், ராமனை நீரில் இருந்து மீட்டனர்.
உடனடியாக, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

