/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒளிரும்வர்ணம் பூசாத வேகத்தடைகள் கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அபாயம்
/
ஒளிரும்வர்ணம் பூசாத வேகத்தடைகள் கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அபாயம்
ஒளிரும்வர்ணம் பூசாத வேகத்தடைகள் கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அபாயம்
ஒளிரும்வர்ணம் பூசாத வேகத்தடைகள் கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அபாயம்
ADDED : மார் 04, 2025 12:56 AM

கடம்பத்துார், திருவள்ளூர் - கடம்பத்துார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது திருப்பாச்சூர், பிரையாங்குப்பம்.
இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், கடம்பத்துார் வரை வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வேகத்தடைகளுக்கு பூசப்பட்ட சாதாரண வெள்ளை வர்ணம், நாளைடைவில் வாகனங்கள் செல்வதில் அழிந்து விட்டது.
இந்த வேகத்தடைகளில் ஒளிரும் வெள்ளை வர்ணம் பூசப்படாததால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால், இரவு நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே, நெடுஞ்சாலை துறையினர், நடவடிக்கை எடுத்து, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு ஒளிரும் வெள்ளை வர்ணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.