/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
/
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
பள்ளிப்பட்டில் செயல்படாத சிக்னல் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 05, 2024 11:00 PM

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டு நகரம். பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தை ஒட்டி, ஆந்திர மாநில எல்லை துவங்குகிறது.
பள்ளிப்பட்டு அடுத்துள்ள ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமவாசிகள், தங்களின் அன்றாட தேவைகளுக்காக பள்ளிப்பட்டுக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், பள்ளிப்பட்டு நகரம் எந்நேரமும் மக்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. சோளிங்கர் சாலை, நகரி சாலை, புத்துார் சாலை சந்திக்கும் கூட்டு சாலையில், போக்குவரத்து நெரிசல் அதிகளவில் உள்ளது. குறுகிய இந்த மார்க்கத்தில் எதிரெதிரே வரும் வாகனங்களால் நெரிசல் ஏற்படுகிறது.
மேலும், பள்ளிப்பட்டு அடுத்த ஆந்திர மாநிலம், நலவாய் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலைக்கு தமிழகத்தில் இருந்து பள்ளிப்பட்டு நகரின் வழியாக செல்லும் கரும்பு லாரிகளால் மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படுகிறது.
இதற்காக, நகரி கூட்டு சாலையில் சிக்னல் நிறுவப்பட்டது. ஆனால், இந்த சிக்னல் செயல்படுவது இல்லை.
இதனால், தான்தோன்றி தனமாக இயக்கப்படும் வாகனங்கள் நெரிசல் அதிகரிப்பதுடன், விபத்து அபாயமும் நிலவுகிறது.
வாகன ஓட்டிகள் மற்றும் பகுதிவாசிகள் பாதுகாப்பு கருதி, இந்த சிக்னல் சீராக இயக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.