/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
/
திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
திருத்தணி கே.ஜி.கண்டிகையில் நெல்கொள்முதல் நிலையம் திறப்பு
ADDED : ஆக 22, 2024 07:36 PM
திருத்தணி:திருத்தணி ஒன்றியத்தில், விவசாயிகள், 1262 ஏக்கர் பரப்பில் சொர்ணவாரி பருவத்தில் நெல் பயிரிட்டிருந்தனர்.
இதன் மூலம், 28 லட்சத்து, 10 ஆயிரம் கிலோ நெல் சாகுபடி செய்வதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போது விவசாயிகள் நெல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக உள்ளனர்.
இந்நிலையில் விவசாயிகள் நலன் கருதி, திருத்தணி வருவாய் கோட்டத்தில் நேற்று முதன் முதலாக கே.ஜி.கண்டிகையில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு நடந்தது.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் முருகன் தலைமை வகித்தார். திருத்தணி வேளாண் துணை அலுவலர் ஏழுமலை வரவேற்றார்.
இதில், திருத்தணி தி.மு.க.,- எம்.எல்.ஏ., சந்திரன் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வேளாண் துணை இயக்குனர் மோகன், திருத்தணி வேளாண் உதவி அலுவலர் உமாபதி உள்பட வேளாண் அலுவலர்கள் பங்கேற்றனர்.