/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அங்கன்வாடி மையத்தில் வளரும் செடிகள் அகற்ற வலியுறுத்தல்
/
அங்கன்வாடி மையத்தில் வளரும் செடிகள் அகற்ற வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்தில் வளரும் செடிகள் அகற்ற வலியுறுத்தல்
அங்கன்வாடி மையத்தில் வளரும் செடிகள் அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஆக 29, 2024 11:43 PM

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், 124 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில கட்டடங்கள் பழுதடைந்துள்ளன.
திருவாலங்காடு, மணவூர் கனகம்மாசத்திரம் உள்ளிட்ட இடங்களில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தாலும், பல இடங்களில் வாடகை கட்டடங்களில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
பழைய கட்டடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில், கழிப்பறை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், குழந்தைகளின் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
திருவாலங்காடு அடுத்த பகவதி பட்டாபிராமபுரம் கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடத்தின் மேற்தளத்தில் செடிகள் முளைத்துள்ளன.
மேலும் அருகே இருந்த மரத்தில் இருந்து விழும் சருகுகள் மேல்தளத்தில், மழைநீருடன் சேர்ந்து மக்குவதால், மேல்தளம் வலுவிழக்கும் நிலை உள்ளது.
எனவே, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அங்கன்வாடி மையத்தை சீரமைக்கவும் உரிய முறையில் பராமரிக்கவும் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

