/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாகசாலையில் நெற்களம் அமைக்க வலியுறுத்தல்
/
பாகசாலையில் நெற்களம் அமைக்க வலியுறுத்தல்
ADDED : ஏப் 21, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், பாகசாலை ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் 700க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல், விவசாயம் செய்துவருகின்றனர்.
அறுவடை செய்யும் நெற்கதிரை பிரித்தெடுக்க கதிரடிக்கும் களம் இல்லாததால் சாலை, தரைப்பாலம், கோவில், ஏரியை ஒட்டிய பகுதியை நெற்களமாக மாற்றி உலர்த்தி வருகின்றனர்.
அவ்வாறு உலர்த்தும் போது வாகன ஓட்டிகள், பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
எனவே பாகசாலையில், நெற்களம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

