/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரம்
/
எல்லை பகுதிகளில் வாகன சோதனை தீவிரம்
ADDED : மே 12, 2024 12:05 AM

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலத்தில் உள்ள, 175 சட்டசபை தொகுதிகள், 25 லோக்சபா தொகுதிக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடக்கிறது.
சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி, பா.ஜ., ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு கூட்டணியாகவும், தற்போதைய ஆந்திர முதல்வரான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்., மற்றும் ஜெகன்மோகன் சகோதரி ஷர்மிளா தலைமையிலான காங்., கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது.
நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக, ஆந்திரா முழுதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள மதுக்கடைகள் அனைத்தும் நேற்று மாலை மூடப்பட்டன.
ஆந்திர எல்லையை ஒட்டி தமிழக பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.