/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நேசனுார் ஓடை மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
/
நேசனுார் ஓடை மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்
ADDED : செப் 12, 2024 11:47 PM

ஆர்.கே. பேட்டை:ஆர்.கே. பேட்டை ஒன்றியம், கோபாலபுரம் அருகே அமைந்துள்ளது நேசனுார். கிராமத்தின் வடமேற்கில் ஓடை பாய்கிறது.
இந்த ஓடைக்கு ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர் பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த ஓடையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தில் சேதம் அடைந்தது.
இதனால் திருநாதராஜபுரம், அல்லிப்பூ குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதைஅடுத்து, ஓடையின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கியது.
இந்தப் பணிகள் தற்போது நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. இறுதி கட்டமாக இணைப்பு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
வரும் பருவமழைக்கு முன்னதாக இந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உறுதியான மேம்பாலத்தால் திருநாதராஜபுரம், அல்லிப்பூ குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு இனி போக்குவரத்து பாதிப்பு ஏற்படாது என்பதால் பகுதி வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

