/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுச்சாவடி பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்
/
ஓட்டுச்சாவடி பொருட்கள் தயார் செய்யும் பணி தீவிரம்
ADDED : ஏப் 16, 2024 08:10 PM
திருத்தணி:தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19ம் தேதி ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில், இரு நாட்களே உள்ள நிலையில், அரக்கோணம் லோக்சபா தொகுதி ஓட்டுச்சாவடி மையங்களில் தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணியில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், வருவாய் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், திருத்தணி சட்டசபை தொகுதியில், மொத்தம் 330 ஓட்டுச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் தயார் செய்யும் பணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று முதல் துவங்கியது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான தீபா தலைமையில், தாசில்தார் மதியழகன், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் ஓட்டுச்சாவடிக்கு தேவையான பொருட்கள் ஒன்றாக சேர்த்து பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பணிகள் இன்று இரவுக்குள் முடிந்து, 18ம் தேதி மதியம் முதல் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இதற்காக, வருவாய் துறை அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, 200க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தீபா தெரிவித்தார்.

