/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை
/
சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனை
ADDED : மார் 22, 2024 09:06 PM
ஊத்துக்கோட்டை:தமிழக -- ஆந்திர எல்லையில் உள்ளது ஊத்துக்கோட்டை பேரூராட்சி. சென்னை -- திருப்பதி - திருவள்ளூர் - சத்தியவேடு ஆகிய சாலைகளை இணைக்கும் வகையில் இவ்வூர் அமைந்துள்ளது.
சென்னையில் இருந்து தினமும், 15,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்களும், திருவள்ளூர் - சத்தியவேடு சாலையில், 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இவ்வூர் வழியே செல்கின்றன.
இதில் திருப்பதி செல்லும் வழியில், ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் சோதனைச் சாவடி உள்ளது. பகல், இரவு முழுதும் இங்கு வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், சத்தியவேடு - திருவள்ளூர் மார்க்கத்தில் சோதனைச் சாவடிகள் இல்லை. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளதால், இந்த மார்க்கத்தில் சத்தியவேடு சாலையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஒரு எஸ்.ஐ., இரண்டு போலீசார் வீதம் பகல், இரவு இரண்டு சுழற்சி முறையில் பணியில் உள்ளனர். நேற்று இங்கு பணியில் இருந்த போலீசார் அவ்வழியே வந்த வாகனங்களை தீவிர சோதனை நடத்தினர்.

