/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு ஊழியருக்கு தபால் ஓட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
/
அரசு ஊழியருக்கு தபால் ஓட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு ஊழியருக்கு தபால் ஓட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
அரசு ஊழியருக்கு தபால் ஓட்டு 25க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 21, 2024 10:12 AM
திருவள்ளூர்:'லோக்சபா தேர்தலில், அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், தபால் ஓட்டு போட வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது' என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
திருவள்ளூர் மாவட்டத்தில் லோக்சபா தேர்தல், ஏப்., 19ல் நடக்கிறது. இத்தேர்தலில் திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட, அத்தியாவசிய சேவை துறையை சார்ந்த ரயில்வே, சுகாதாரம், உணவு வழங்கல், தீயணைப்பு, தொலை தொடர்பு, போக்குவரத்து, மின்சாரம், செய்தி தொடர்பு ஆகிய துறைகளைச் சார்ந்த பணியாளர்களுக்கு, தபால் ஓட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்கள், விண்ணப்ப படிவம் '12 டி' ஐ பூர்த்தி செய்து அத்தொகுதிக்கு உட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம், வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தபால் ஓட்டு கோரி பெறப்பட்ட அத்தியாவசிய சேவை துறையை சார்ந்த பணியாளர்களுக்கு, வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பின், தேர்தல் நடத்தும் விதிகளின்படி பிரத்யேகமாக தபால் ஓட்டு பதிவு செய்ய வசதி ஏற்படுத்தி தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

