/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
நம்மாழ்வார் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 23, 2024 09:49 PM
திருவள்ளூர்:இயற்கை சார்ந்த விவசாயத்தில் ஈடுபடுவோருக்கான 'நம்மாழ்வார் விருதுக்கு' விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில், இயற்கை சார்ந்த அங்கக விவசாயத்தில், ஈடுபடும் விவசாயிகளை ஊக்கப்படுத்த, நம்மாழ்வார் விருது வழங்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது.
மாநில அளவில் அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும், தன்னார்வ விவசாயிகளை கவுரப்படுத்தும் இந்த விருதுடன், ரொக்க பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை குடியரசு தினத்தன்று முதல்வரால் வழங்கப்படும்.
முதல் பரிசு 2.5 லட்சம் மற்றும் 10,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கம்; இரண்டாம் பரிசு, 1.5 லட்சம் மற்றும் 7,000 ரூபாய் மதிப்புடைய பதக்கம் மற்றும், மூன்றாம் பரிசு 1 லட்சம் மற்றும் 5,000 ரூபாய் மதிப்புடைய பதக்கம் வழங்கப்படும்.
எனவே, நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள், 'agrisnet' என்ற இணையதளத்தில், பதிவு கட்டணம் 100 ரூபாய் செலுத்தி, செப்.15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல் பெற, அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

