ADDED : ஆக 26, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம், தச்சூரில் இருந்து பள்ளிப்பட்டு வழியாக ஆந்திர மாநிலம், சித்துார் செல்ல ஆறுவழி சாலை பணி நடந்து வருகிறது.
பள்ளிப்பட்டு அடுத்த பெருமாநல்லுார் ஏரியில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணிக்கான இரும்பு குழாய்கள் நேற்று முன்தினம் திருடுபோயுள்ளன.
இது குறித்து பொறியாளர் தினகரன், 46, என்பவர் பள்ளிப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பெருமாநல்லுார் காலனியை சேர்ந்த பாண்டியன், 30, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்பது இரும்பு குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.