/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் 'சிசிடிவி' தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
அத்திமாஞ்சேரிபேட்டையில் 'சிசிடிவி' தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
அத்திமாஞ்சேரிபேட்டையில் 'சிசிடிவி' தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
அத்திமாஞ்சேரிபேட்டையில் 'சிசிடிவி' தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : மே 10, 2024 08:07 PM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அத்திமாஞ்சேரிபேட்டை கிராமம்.
இந்த கிராமத்தில், 15,000 பேர் வசித்து வருகின்றனர். கிராமத்தின் தென்மேற்கில் நெல்லிக்குன்றம் முருகர் மலைக்கோவில் உள்ளது. வடக்கில், கல்யாண சுந்தரேசனார் கோவில் உள்ளது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அத்திமாஞ்சேரிபேட்டையில் வன்முறை சம்பவங்களும், வாகன திருட்டு சம்பவங்களும் அதிகரித்துள்ளன. குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், கொடிவலசா ஊராட்சி சார்பில், ஊராட்சிக்கு உட்பட்ட அத்திமாஞ்சேரிபேட்டையில், 'சிசிடிவி' பொருத்தப்பட்டது.
நெல்லிக்குன்றம் மலைக்கோவிலிலும், கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, நெல்லிக்குன்றம் மலைக்கோவிலில் உண்டியல் திருடு போனது. கொள்ளையர்கள் உண்டியலை துாக்கி சென்ற காட்சிகள், கேமராவில் பதிவாகி இருந்தன.
கடந்த 6ம் தேதி இரவு, அத்திமாஞ்சேரிபேட்டையில் இருசக்கர வாகனம் திருட வந்தவர்களுடன் அந்த பகுதியை சேர்ந்த முதியவர் ஒருவர் போராடி விரட்டிய காட்சியும், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அத்திமாஞ்சேரிபேட்டையில் குற்ற சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், ஊராட்சி சார்பில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.